வெள்ளி, 23 டிசம்பர், 2011

இலங்கை தமிழரின் இன்றைய நிலை

தமிழர் தாயகம் ...இன்று தந்தைக்கு பயந்து தப்பி வந்த விஜயனின் வாரிசுகளின் தாயகம் ஆகி இருக்கின்றது .....இலங்கையின் பூர்விக குடிகளையே தமிழ்நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள் என கூறும்  கூட்டம் ஒரு பக்கம்,ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை முள்வெளி கம்பிகளக்குள் அடைத்து வைத்து அழகு பார்க்கும் "லங்கன் ஹிட்லர்" ஒரு பக்கம் என எங்கு திரும்பினும் இடியாப்ப சிக்கலாக இருக்கிறது தமிழர் வாழ்வு.

இந்தியாவின் சமஷ்டி முறையே தீர்வு என தமிழர்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலைபுலிகளும் ஒத்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே,இதன் பொது ஆட்சி அதிகாரம் மட்டுபடுத்த பட்ட  அளவிலேயே தமில்றகலக்கு வழங்க படும்.எனின் தமிழர்களின் சுதந்திர வாழ்வு அங்கு உறுதி படுத்த பட்டு இருக்கும்.ஆயினும் சில மாதங்கள் முன்பு அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோட்டபாய கூறியதாவது,புலிகளை அழிதாயுற்று,இனி அதிகார பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை..இதன் மூலம் அவர் கூற வருவதாவது,இனி உங்களக்கு எங்க கைல தான் சாவு,எவன் நினச்சாலும் எங்க ஆர்மி உங்க வீட்டுல கலவேடுப்பான் ,உங்க வீட்டு பெண்களின் பாதுகாப்புக்கு நாங்க உத்திர வாதம் இல்லை என்பதே....யுத்தம் முடிந்து 2  வருடங்கள் ஆகியும் இன்னும் தமிழர் தாயக பகுதிகளில் இராணுவமே பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது.போலீஸ் அதிகாரம் அமுல் படுத்த படவில்லை.இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஹெய்டியில் பல்வேறு நாடுகளின் அமைதி படைகள் நடாத்திய அட்டூழியங்களை உதாரணமாக கொள்ளலாம்.


இந்தியாவின் எந்த இனத்தவரும் தமிழர்கள் அளவு பிற நாடுகளில் அவதியுற்று இருப்பார்களா என்பது சந்தேகமே,தமிழர்களின் தமிழ் ஈழ தாயக கனவு தகர்ந்து இருப்பினும் இதனை இவ்வாறே அடக்கி வைக்க முயற்சிப்பின்,ஈழ தமிழர் விவகாரம் மத்திய கிழக்கின் "பெரு வெடிப்பை" போல்    
வெடித்து சிதறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை...

1 கருத்து:

  1. இதையும் எழுதிப்போட்டு சுவனப்பிரியனின் வலைப்பூவில் என்னமாய் எடுத்து விட்டிருக்கிறியள் அப்பு கதையை ! சும்மா சொல்ல்ல்க்கூடாது அப்பு உங்கட விளையாட்டு. கொழும்புக்காரரல்லோ நீங்கள். ஊருக்கு ஒரு கதையும் உலகத்துக்கு இன்னொரு கதையுமா நல்லாத்தான் ‘கிரிக்கட்’ ஆடுறியள்!!!!

    பதிலளிநீக்கு